அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
நிதானம் இழந்து, விரக்தியின் உச்சத்தில் கட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். பிக்பாக்கெட் என்று ஓ. பன்னீர் செல்வம் பேசுவது அரசியல் நாகரீகமா? கடந்த காலத்தில் என்னிடம் இருந்த நிதித்துறையை பறித்துக் கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம். சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் வரக் கூடாது என்று சொன்னவரும் ஓ.பன்னீர்செல்வம் தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.