திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொத்துமுட்டி பாளையத்தில் உள்ள தாவரவியல் பூங்காவுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். 500-க்கும் மேற்பட்ட பல வகையான மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. விபத்து குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.