பீஜிங் : நம் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் சீனாவில் பரவியுள்ள நிலையில், அங்குள்ள இளைஞர்கள் சமூக வலைதளங்களில், அவரை செல்லப் பெயர் சூட்டி பாராட்டி வருகின்றனர்.
நமக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் பல ஆண்டுகளாக எல்லை பிரச்னையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், அங்குள்ள சமூக வலைதளங்களில் இளைஞர்கள், பிரதமர் மோடியை பாராட்டி கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றனர்.
‘சீனா வெய்போ’ என்ற சமூக ஊடகம், பிரதமர் மோடியை, ‘லாக்ஸியன்’ என செல்லப் பெயரிட்டு அழைத்துள்ளது. இது குறித்து சீனாவின் மூத்த பத்திரிகையாளர் கூறியதாவது:
லாக்ஸியன் என்பது சில வித்தியாசமான திறன்களைக் கொண்ட, வயதான அழியாத ஒருவரை குறிக்கும் சொல். இது, வேறு எந்த உலக தலைவர்களுக்கும் கிடைக்காத புகழ். மற்ற தலைவர்களை விட மோடி வித்தியாசமானவர், ஆச்சரியமானவர் என சீன மக்கள் கருதுகின்றனர்.
அவரது உடையை மிகவும் விரும்பும் மக்கள், அவரது கொள்கைகள் முந்தைய இந்திய தலைவர்களை விட வேறுபட்டு உள்ளதாக கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement