இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் 2023-க்கான அறிவிப்பில், திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று கூறியது குறித்த அறிவிப்பு வெளியாகியது.
ஆனால், இது தகுதியின் அடிப்படையில் தான் வழங்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. இதற்கு தற்போது பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றது. ஏற்கனவே ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் இதை வழங்குவதாக திமுக அரசு உறுதியளித்து இருந்தது.
ஆனால் மிக தாமதமாக தான் இப்பொழுது நடைமுறைக்கு வரவுள்ளது. அதுவும் தகுதியின் அடிப்படையில் தான் இது வழங்கப்படும் என்றும் வரும் செப்கம்பர் 15 முதல் இந்த உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளது. மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பு பற்றி மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்தில், “இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற கனவை முதலில் முன்னெடுத்தது மநீம கட்சி புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன்” என்று கூறியுள்ளார்.