சென்னை பெரம்பூரில் சொத்து தகராறில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணனை பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (63). இவருடைய மனைவி அமுலு. இவர்களுடைய வீட்டின் கீழ்தளத்தில் முனிரத்தினத்தின் தங்கை தனலட்சுமி வசித்து வருகிறார். இந்நிலையில் முனிரத்தினத்திற்கும், தனலட்சுமிக்கும் இடையே சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முனிரத்தினத்தின் மீது தங்கை தனலட்சுமி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதையடுத்து முனிரத்தினத்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து தனலட்சுமியிடம் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்