TN Budget 2023 Annamalai Tweet: தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் தற்போது அறிவிக்கப்பட்டு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. திமுக அரசு 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆட்சிப்பொறுப்பு இரண்டாண்டு காலம் நிறைவடைய உள்ள நிலையில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என தொடர்ந்து கேள்வி எழுந்து வந்தது.
மகளிருக்கான உரிமைத்தொகை
அந்த வகையில், மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை வரும் நிதியாண்டில், அதாவது முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப். 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட உடனேயே இதற்கு எதிர்ப்பும் வலுத்தது. அதாவது, தேர்தல் அறிக்கையில், முதலில் இது அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது தகுதிவாய்ந்தவர்களுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
அண்ணாமலையின் கோரிக்கை!
இதுகுறித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில்”ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.
29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல்,தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் @BJP4Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறேன்.(2/2)
— K.Annamalai (@annamalai_k) March 20, 2023
வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
மடைமாற்ற வேண்டாம்…
அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இபிஎஸ் எதிர்ப்பு
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,”எதன் அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்கிறார்கள் என்பதையும் அவர்கள் அறிவிக்கவில்லை. மேலும், இதற்கு ஒதுக்கியுள்ள நிதியால் சுமார் 1 கோடி மகளிருக்குக் கூட உரிமைத்தொகையை கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை” என கூறியிருந்தார்.