மெஹுல் சோக்சிக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டிஸ் ரத்து; ஒன்றிய அரசுக்கு பெருத்த அடி.!

இந்திய தேசிய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் தொழிலதிபர்களை நாடு கடத்த முடியாமல் இந்திய அரசு திணறி வருகிறது. விஜய் மல்லையா, நீர்வ் மோடி, மெஹுல் சோக்‌சி உள்ளிட்டவர்கள் அந்த பட்டியலில் உள்ளனர். அவர்களை இந்தியா கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதில் தோல்வியே இந்திய அரசுக்கு கிடைத்து வருகிறது.

மெஹுல் சோக்சி மற்றும் அவரது மருமகன் நிரவ் மோடி ஆகியோர் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியன பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது சுமார் 2 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தியாவில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட் கார்னர் நோட்டீசை இன்டர்போல் வாபஸ் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்தியாவில் உள்ள இன்டர்போலின் நோடல் ஏஜென்சியான சென்ட்ரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன், இந்த முடிவை இன்னும் உறுதிப்படுத்தவோ அல்லது அதிகாரப்பூர்வ அறிக்கையையோ வழங்கவில்லை. நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டதன் மூலம் சோக்ஸி உலகம் முழுவதும் இனி சுதந்திரமாக பயணிக்க முடியும்.

இந்த வழக்கில் இந்திய அரசை பிரதிவாதிகளாக ஆண்டிகுவா உயர் நீதிமன்றத்தில் மெகுல் சோக்ஸி சமீபத்தில் மனு தாக்கல் செய்தார். இரண்டு இந்திய உளவுத்துறையான ரா (RAW) முகவர்கள், அவரை ஆன்டிகுவாவிலிருந்து கடத்திச் சென்று, ஜூன் 2021இல் டொமினிகா குடியரசுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் குறித்த விழுப்புர மாவட்ட பொது மக்கள் கருத்து

2018 ஆம் ஆண்டில், அதே ஆண்டு ஆன்டிகுவா குடிமகனாக ஆன சோக்ஸியை நாடு கடத்துமாறு இந்தியா ஆன்டிகுவாவிடம் கோரிக்கை விடுத்தது. சோக்ஸி இனி இந்திய குடிமகன் இல்லை என்றாலும், அவரது இந்திய பாஸ்போர்ட்டை அதிகாரிகள் இன்னும் ரத்து செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தோல்வியை தழுவியுள்ளதற்கு
காங்கிரஸ்
கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரியப் பெண்கள் மீது வெறி.. 47 பலான வீடியோக்கள்.. ஆஸ்திரேலிய பாஜக பிரமுகர் லீலை.!

உள்நாட்டில் உள்ள எதிர்கட்சிகளை முடக்க விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய நிறுவனங்களை ஏவி விடும் அரசு, இந்திய மக்களின் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியவர்களிடம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மெஹுல் சோக்சியை எப்போது இந்தியாவிற்கு கொண்டு வருவீர்கள் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.