யாழில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த முதியவர்


யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (19.03.2023) பதிவாகியுள்ளது.

யாழ். புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு , வெளிநாட்டில்
உள்ள மகன் கட்டம் கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தினை வழங்கி,
யாழ்ப்பாணத்தில் காணி வாங்கி வீடு காட்டுமாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த முதியவர் | Old Man Suicide In Jaffna

முதியவர் மரணம்

இந்நிலையில் பெண்ணொருவர் தனது தேவைக்கு என முதியவரிடம்
இருந்து பணத்தினை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதியவரும் நம்பிக்கை அடிப்படையில், மகனுக்கு
தெரியாமல் பணத்தினை வழங்கியுள்ள நிலையில் பணத்தினை பெற்றுக்கொண்ட பெண் பணத்தினை திருப்பி கொடுக்காதமையால்  முதியவர்
ஏமார்ந்துள்ளார்.

இந்நிலையில் மகன் காணியை வாங்குமாறு வற்புறுத்தி வந்த நிலையில்
கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான முதியவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.