ரஷ்ய படைகள் வசமுள்ள உக்ரைனின் மரியுபோல் நகருக்கு, முதல் முறையாக அதிபர் புடின் சென்ற விவகாரத்தில், திருடனைப் போல் சென்று வந்திருப்பதாக உக்ரைன் விமர்சித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், முதன்முறையாக உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷ்ய அதிபர் புதின் நேற்று சென்றார்.
நகரின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்ய புதின் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மரியுபோலில் ரஷ்ய அதிபர் புதின் பொதுமக்களுடன் கலந்துரையாடும் வீடியோவை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.