ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட உயர்வு! எரிபொருள் விலை குறையலாம்


டொலரின் மதிப்பு 200 ரூபா அல்லது 300 என்ற நிலையான மாற்று விகிதத்தில் இருக்கும் என கூற முடியாது. கடனை செலுத்த ஆரம்பித்தால், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, இறக்குமதியை அனுமதித்தால், டொலர் மதிப்பு மீண்டும் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

கட்டணங்கள் குறைக்கப்படலாம்

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை  ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருளின் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்கள் கணிசமான விகிதத்தில் குறைக்கப்படலாம்.

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட உயர்வு! எரிபொருள் விலை குறையலாம் | Sri Lanka Rupee And Dollar Rate

இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவை இப்போது பாரிய இலாபத்தை ஈட்டுகின்றன.

ஆனால், எரிபொருள் மற்றும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் நடைமுறை மிகவும் ஊழல் நிறைந்ததாக இருப்பதாகக் கூறுவது வருத்தமளிக்கிறது.

இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாலும், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைக்கப்பட்டதாலும் அமெரிக்க டொலருக்கான தேவை குறைந்துள்ளதால் ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை இலங்கை செலுத்த ஆரம்பித்தால், இறக்குமதி கட்டுப்பாடுகளை இரத்து செய்து இறக்குமதியை அனுமதித்தால் டொலர் மீண்டும் உயரும் என்றார்.

டொலரின் மதிப்பு ரூ.200 அல்லது 300 என்ற நிலையான மாற்று விகிதத்தில் இருக்கும் என கூற முடியாது. கடனை செலுத்த ஆரம்பித்தால், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, இறக்குமதியை அனுமதித்தால், டொலர் மதிப்பு மீண்டும் உயரும் என தெரிவித்துள்ளார். 

You may like this video



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.