வங்கதேசம்: வங்கதேசத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் தலைநகரான தாக்காவில் இருந்து 63 கிமீ தொலைவில் உள்ள மதாரிபூர் என்ற பகுதியில் உள்ள விரைவு சாலையில் 45 பயணிகளுடன் சென்ற சொகுசு பஸ் புதிதாக அமைக்கப்பட்ட விரைவு சாலையில் விபத்தில் சிக்கியது.
ஷிப்சார் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள அழமான சாக்கடையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது இந்த கோரவிபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.விபத்துக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். காயத்துடன் மீட்கப்பட்ட பலரது நிலைமை கவலை கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.