சேலத்தில் அரசின் விதிகளை மீறி வாகனங்களில் பதிவெண் பலகைகள் பொருத்தியிருந்தவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக தலைக்கவசம் அணியாமலும் முறையான பதிவெண் பலகை இல்லாமலும் சென்ற வாகன ஓட்டிகளை வழிமறித்து, அபராதம் விதித்தனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்களின் புகைப்படங்களுடன் கூடிய வாகன பதிவெண் பலகைகளைக் கொண்ட வாகன ஓட்டிகளை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.