விருதுநகர் : விருதுநகரில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு கொண்டு வரப்பட்டு காயமடைந்த யானை உயிரிழந்தது. ஜனவரி 2ல் விருதுநகர் ராமர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு ராஜபாளையத்தில் யானை லலிதா அழைத்து வரப்பட்டது.57 வயதான யானை வாகனத்தில் இருந்து இறக்கும் போது கீழே விழுந்து காயமடைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டது.