தமிழ்நாடு பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து வருகிறார்.
விவசாய கடன் தள்ளுபடிக்கு 3,993 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2391 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடிக்கும் 1000 கோடி ரூபாய் நகைக் கடன் தள்ளுபடிக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு 434 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சைக்கிள் வழங்க 305 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில் முன்னோடி திட்டத்துக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு 1580 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5145 கி.மீ கிராம சாலைகள் அமைக்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் ரூ.175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு கட்டங்களாக செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்.
சென்னை பெரு நகரில் தனியார் பங்களிப்புடன் கழிவறைகள் கட்டவும், மேம்படுத்தவும் ரூ.430 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ 1500 கோடியில் அடையாறு, கூவம் ஆறுகள் சீரமைக்கப்பட்டு, பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.7145 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.