டெல்லி: வெளிநாடுகளை சேர்ந்த 3,295 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் நடத்தி வருகின்றன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினர் பாரிவேந்தரின் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். வெளிநாட்டு நிறுவனங்களின் 14,173 துணை நிறுவனங்களும் இந்தியாவில் தொழில் நடத்தி வருகின்றன என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.