மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லால் சலாம்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டில் உள்ள அரசியலை மைய்யப்படுத்தி இப்படம் உருவாக்கப்படுதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் மூத்த நகைச்சுவை நடிகரான செந்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். Ponniyin Selvan 2: தரிசனம் கேட்ட வந்தியத்தேவன்… கெத்து காட்டிய குந்தவை!
சிறப்பு தோற்றத்தில் ரஜினிநடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனது கதாப்பாத்திரத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் இதற்காக 25 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
அப்பா அக்கா கொடூர கொலை… நடிகையின் மகன் வெறிச்செயல்… சென்னையில் பயங்கரம்!
ஷூட்டிங் ஸ்பாட்லால் சலாம் படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டன. இதற்கான படப்பிடிப்பு, திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு தாசில்தார் அலுவலகத்தின் பெயர் பலகை கதைக்கு ஏற்றதுபோல் மாற்றப்பட்டது. படப்பிடிப்பு நடைபெறும் தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் திரண்டு படப்பிடிப்பை தங்களின் மொபைல் போன்களில் படம் பிடித்தனர்.
அப்பாவையும் அக்காவையும் கொன்றது ஏன்? டப்பிங் கலைஞர் பகீர் வாக்குமூலம்!
பவுன்சர்கள்இதனால் கடுப்பான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அவர்களின் செல்போன்களில் இருந்த படம் தொடர்பான வீடியோக்களையும் போட்டோக்களையும் நீக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து படக்குழுவினரின் பாதுகாப்புக்காக இருந்த பவுன்சர்கள் மக்களின் செல்போன்களை பிடுங்கி அதில் இருந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் நீக்கினர். மேலும் மக்களிடமும் அவர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வந்த கோபம்.. லால் சலாம் படப்பிடிப்பில் நடந்தது என்ன?
இடையூறுஇதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தாசில்தார் அலுவலக நுழைவு பாதையில், கயிறு கட்டி தடுப்புகளை ஏற்படுத்தி, யாரும் செல்ல முடியாதப்படி பவுன்சர்கள் மக்களை தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விடுதிகளுக்கு செல்ல முடியாமல் மாணவிகள் பாதிக்கப்பட்டதாகவும், தாசில்தார் அலுவலகம், இ-சேவை மையத்தை தேடி வந்த பொதுமக்களும், ஊழியர்களும் சிரமம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
Rohini: ரகுவரன் இப்போது இருந்திருந்தால்… மறைந்த கணவரை நினைத்து உருகிய ரோகினி!
ஆட்சியர் உத்தரவுஇந்த விவகாரம் திருவண்ணாமலை ஆட்சியர் காதுகளுக்கு எட்டிய நிலையில், படத்தின் இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் படப்பிடிப்பு நடத்தியது குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் இருந்த நகைகள் மாயமாகியுள்ளன.
Andrea: ஆஹா… மஞ்சள் நிற பட்டு சேலையில் மாம்பழம் போல இருக்கும் ஆண்ட்ரியா…
நேரமே சரியில்லைநகைகள் திருட்டு, படப்பிடிப்பில் பிரச்சனை, தனிப்பட்ட வாழ்க்கையிலும், ஆட்சியர் விசாரணை என அடுத்தடுத்து ஐஸ்வர்யா சிக்கல்களை சந்தித்து வருகிறார். இதனைக் கேட்ட ரசிகர்கள், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நேரமே சரியில்லை போல என கூறி வருகின்றனர். சாதாரணமாக படப்பிடிப்பில் ஐஸ்வர்யா அதிகம் கோபப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா புதுபுதுசாக கிளம்பும் பிரச்சனைகள் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
Meena: ‘பப்புக்குலாம் கூப்பிடுவாங்க.. தனியா இருந்ததே இல்லை’ போட்டுடைத்த மீனா!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்