நடிகர் அஜித் மற்றும் ஷாலினியின் ரொமான்டிக் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித்தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடைசியா அவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியானது. பொங்கலின் போது வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் 330 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது. இந்நிலையில் அஜித்தின் ஏகே 62 படம் குறித்த நாள்தோறும் ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது. Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நேரம் சரி இல்லையோ? அடி மேல அடியா இருக்கே!
விரைவில் அறிவிப்புமுதலில் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்குவார் என கூறப்பட்ட நிலையில் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனிதான் ஏகே 62 படத்தை இயக்கவுள்ளதாக உறுதியாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Ponniyin Selvan 2: தரிசனம் கேட்ட வந்தியத்தேவன்… கெத்து காட்டிய குந்தவை!
குடும்ப போட்டோஇந்நிலையில் நடிகர் அஜித்தின் குடும்ப போட்டோக்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகிறது. அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களின் குடும்ப படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இருவரும் லண்டனில் ஓய்வை கழித்த போட்டோக்கள் வெளியானது.
அதிரடி முடிவை எடுத்த கீர்த்தி சுரேஷ்!
மகனுடன்அதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் குடும்பத்துடன் கலந்து கொண்ட போட்டோக்கள் வெளியானது. அதனை தொடர்ந்து ஃபுட் பால் க்ரவுண்டில் அஜித் தனது மனைவி ஷாலினி மகன் ஆத்விக்குடன் நின்றிருந்த போட்டோ வெளியானது. அந்த போட்டோக்கள் வைரலான நிலையில் தற்போது புதிய போட்டோக்கள் வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.
Andrea: ஆஹா… மஞ்சள் நிற பட்டு சேலையில் மாம்பழம் போல இருக்கும் ஆண்ட்ரியா…
ரொமான்டிக் போட்டோஸ்அதாவது நடிகர் அஜித்தும் நடிகை ஷாலினியும் நடுக்கடலில் சொகுசு கப்பலில் ரொமான்ஸ் செய்தப்படி உள்ளனர். இதில் நடிகை ஷாலினி வெள்ளை நிற மேக்சி கவுன் அணிந்து ஃபிரி ஹேர்விட்டு ஹாலிவுட் ஹீரோயின் போல் உள்ளார். அஜித் பச்சை நிற டீ-ஷர்ட் அணிந்து, கருப்பு நிற கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலாக உள்ளார். இருவரது இந்த ரொமான்டிக் போட்டோக்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
அப்பாவையும் அக்காவையும் கொன்றது ஏன்? டப்பிங் கலைஞர் பகீர் வாக்குமூலம்!
Ajith Shalini