Ajith fans blast Sandy Master: பத்து தல பட விழாவில் பேசிய சாண்டி மாஸ்டர் மீது அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
பத்து தலசிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவுக்கு சிம்பு வந்த ஸ்டைலை பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கிவிட்டார்கள். பழைய சிம்புவாக கெத்தாக இருந்தார். அந்த விழாவில் பேசிய சாண்டி மாஸ்டர் சிம்புவை பாராட்டினார். அது தான் அஜித் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.
தலசாண்டி மாஸ்டர் சிம்புவை பாராட்டியதை பார்த்து அஜித் ரசிகர்கள் கடுப்பாகவில்லை. அவர் அடிக்கடி சிம்புவை தல, தல, தலனு பேசியது தான் அஜித் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தமிழகத்தில் ஒரே தல தான், அது எங்க ஏ.கே. தான். அப்படி இருக்கும்போது இந்த சாண்டி மாஸ்டர் எப்படி சிம்புவை தல என்று அழைக்கலாம் என அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Ajith: மவனே, அஜித் பத்தி இன்னொரு வார்த்தை சொன்ன, அவ்ளோ தான்: விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை
சாண்டிஎந்த வம்பு தும்புக்கும் போகாதவர் சாண்டி மாஸ்டர். அவர் ஏதோ சிம்பு மீதான பாசத்தில் ஒரு வேகத்தில் தல என்று அழைக்க அது இப்படி ஆகும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். சமூக வலைதளத்தில் சாண்டி மாஸ்டரை தான் விளாசிக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். கண்டிப்பாக ஏதாவது விளக்கம் அளித்து அஜித் ரசிகர்களை சமாதானம் செய்வார் சாண்டி மாஸ்டர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்அதே நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார், விஜய் தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என பேசினார். அதை கேட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் செம டென்ஷனாகிவிட்டார்கள். அன்றும், இன்றும், என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தான். அது எங்கள் தலைவர் தான் என்றார்கள். மேலும் சரத்குமாரையும் விளாசினார்கள். அதை பார்த்த விஜய் ரசிகர்களோ,வசூல் மன்னனான எங்க அண்ணன் தான் சூப்பர் ஸ்டார் என பதிலுக்கு சொல்ல சமூக வலைதளத்தில் பயங்கர வாக்குவாதம் நடந்தது.
ரசிகர்கள்அன்று சரத்குமாருக்கு நடந்தது இன்று சாண்டி மாஸ்டருக்கு நடக்கிறது. ஒரு வேளை பரபரப்பை கிளப்பத் தான் சாண்டி மாஸ்டர் சிம்புவை தலனு கூப்பிட்டிருப்பாரோ என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது எல்லாம் நெகட்டிவ் பப்ளிசிட்டி தான் பெரிதாக கை கொடுக்கிறது. அதனால் இப்படி கொளுத்திப் போட்டிருப்பாரோ என்றும் சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள். கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த பத்து தல என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush, Meena:பாடி டிமான்டை தவிர உங்களுக்கு வேறு எதுவும் தெரியாதா?: பயில்வானை விளாசும் தனுஷ், மீனா ரசிகர்கள்