அஜித் அவரின் திரைவாழ்க்கையில் பல இயக்குனர்களை நம்பி வாய்பளித்துள்ளார். அவரின் நம்பிக்கை வீண் போகாத வகையில் அந்த இயக்குனர்களும் அஜித்திற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்துள்ளனர்.சரண், எஸ்.ஜெ.சூர்யா, துரை என பல புதுமுக இயக்குனர்களுக்கு அஜித் வாய்ப்பளித்து அவர்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தார்.
அந்த வரிசையில் மிகமுக்கியமானவர் தான் ஏ.ஆர்.முருகதாஸ். குஷி படத்தில் எஸ்.ஜெ.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய முருகதாஸ் அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
Leo: லியோ படத்தின் மெயின் வில்லன் இவரா ?லோகேஷ் வைத்த ட்விஸ்ட்..இதை யாரும் எதிர்பார்களையே..!
அதன் பின் ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என தொடர் வெற்றிகளை குவித்து இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக முன்னேறினார்.ஆனால் சமீபகாலமாக முருகதாசிற்கு சரியான படவாய்ப்புகள் அமையாமல் உள்ளது. இருப்பினும் அவர் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவார் என ரசிகர்களால் நம்பப்படுகின்றது.
இந்நிலையில் அவருக்கு அஜித் தான் தீனா படத்தின் மூலம் இயக்குனராக வாய்ப்பளித்தார். தீனா படத்தில் அஜித்தை முற்றிலும் வித்யாசமான தோற்றத்தில் காட்டியிருப்பார் முருகதாஸ். மேலும் அப்படத்தின் மூலம் தான் அஜித்திற்கு தல என பெயர் வைத்தார் முருகதாஸ்.
மிகப்பெரிய வெற்றியை பெற்ற அப்படத்தை பற்றி பேசிய முருகதாஸ், தீனா திரைப்படத்தின் மூலம் முழு பெயரும், பாராட்டும் அஜித்திற்கே சென்றது.எனக்கு அப்படத்தினால் எந்த ஒரு பாராட்டும் கிடைக்கவில்லை. ஆனால் இயக்குனர் என்ற அந்தஸ்து கிடைத்தது.
இதையடுத்து என் இரண்டாவது படமான ரமணா படத்தின் மூலம் தான் ஒரு இயக்குனராக எனக்கு பாராட்டு வந்தது என பேசியுள்ளார் முருகதாஸ். இந்நிலையில் காதல் படங்களில் நடித்து காதல் மன்னனாக வலம் வந்துகொண்டிருந்த அஜித் தீனா படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார்.
என்னதான் அமர்க்களம் என்ற ஆக்ஷன் படத்தில் அஜித் நடித்திருந்தாலும் தீனா படம் தான் அஜித்திற்கு இளம் ரசிகர்களை பெற்று தந்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவால் தல என செல்லமாக அழைக்கப்பட்டார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.