தமிழ்நாடு சட்டபேரவையில் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து சில நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோயில் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்படும்.
அம்பேத்கரின் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி மான்யம் வழங்கப்படும்.
இலங்கை தமிழர்களுக்கு ரூ.229 கோடி செலவில் 3949 வீடுகள் கட்டித் தரப்படும்.
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.
சென்னை சங்கமம் கலைவிழா தமிழகத்தில் மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும்.