will aishwarya rajinikanth say yes to Dhanush?: தனுஷ் எடுத்துள்ள முடிவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தனுஷ்தனுஷும், அவரின் காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சேர்ந்து கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார்கள். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநர் அவதாரம் எடுத்த 3 படத்தை வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம் தயாரித்தார்கள். அதன் பிறகு சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார்கள்.
Dhanush, Meena: தனுஷுக்கும், மீனாவுக்கும் திருமணம், பாடி டிமான்ட் இருக்கும்: பயில்வான் ரங்கநாதனை விளாசும் ரசிகர்கள்
காலா
வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தனுஷின் மாரி, விக்னேஷ் சிவனின் நானும் ரௌடி தான், காலா, வட சென்னை, மாரி 2 உள்ளிட்ட படங்களை தயாரித்தது வுண்டர்பார் ஃபிலிம்ஸ். மாரி 2 படத்திற்கு பிறகு வுண்டர்பார் நிறுவனம் எந்த ஒரு படத்தையும் தயாரிக்கவில்லை.
Dhanush:பாடி டிமான்டை தவிர உங்களுக்கு வேறு எதுவும் தெரியாதா?: பயில்வானை விளாசும் தனுஷ், மீனா ரசிகர்கள்
மாரி செல்வராஜ்Dhanush: தனுஷுக்கு மறுபடியும் நல்ல ஆள் கிடைச்சுடுச்சு: ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சிவுண்டர்பார் ஃபிலிம்ஸ் கடைசியாக தயாரித்த மாரி 2 படம் கடந்த 2018ம் ஆண்டு ரிலீஸானது. இந்நிலையில் ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிந்துவிட்டார்கள். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம் தனுஷ். அந்த படத்தில் நடிப்பதுடன் தானே தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறாராம். தனுஷ், மாரி செல்வராஜின் வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்வது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
தயாரிப்புமாரி செல்வராஜ் படத்தை தனுஷ் தயாரிக்கிறார் என்று தகவல் வெளியானதுமே இதுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒப்புக்கொள்வாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனுஷுடன் சேர்ந்து வுண்டர்பார் நிறுவனத்தை ஐஸ்வர்யாவும் தான் துவங்கினார் என்கிறார்கள். ஆனால் வுண்டர்பார் நிறுவனத்தின் உரிமையாளர் தனுஷ் என்பதால் எந்த முடிவையும் தனித்து எடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது என்று கூறப்படுகிறது.
கேப்டன் மில்லர்தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படம் மூன்று மொழிகளில் உருவாகவிருக்கிறது. படத்திற்கு பூஜை எல்லாம் போட்டு ப்ரீ ப்ரொடக்ஷன் வேலையை பார்த்து வருகிறார் சேகர் கம்முலா.
இயக்கம்சேகர் கம்முலா படத்தை அடுத்து தனது 50வது படத்தை தனுஷே இயக்குகிறார். தனுஷ் இயக்கும் படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.