வந்தியத்தேவன் கார்த்தியும் குந்தவை த்ரிஷாவும் டிவிட்டரில் விளையாடி வருவது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன்கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக்கப்படுகிறது. இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா புரடெக்ஷன் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது.
Andrea: ஆஹா… மஞ்சள் நிற பட்டு சேலையில் மாம்பழம் போல இருக்கும் ஆண்ட்ரியா…
நட்சத்திர பட்டாளம்இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, ஆழ்வாக்கடியான் நம்பியாக ஜெயரம், பூங்குழலியாக ஐஸ்வர்யலட்சுமியாக பூங்குழலி, வானதியாக ஷோபிதா துலிபாலா, சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அப்பா அக்கா கொடூர கொலை… நடிகையின் மகன் வெறிச்செயல்… சென்னையில் பயங்கரம்!
பொன்னியின் செல்வன் 2இப்படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூலையும் வாரிக் குவித்தது பொன்னியின் செல்வன். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. அப்பாவையும் அக்காவையும் கொன்றது ஏன்? டப்பிங் கலைஞர் பகீர் வாக்குமூலம்!
அக நக பாடல்இந்நிலையில் பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற ‘அக நக’ என்ற பாடல் இன்று மாலை வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இது தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டரில் திரிஷா கையில் வாளை பிடித்தபடி நிற்க எதிரில் கார்த்தி கண்ணை துணியால் கட்டி முட்டிப்போட்டுக்கொண்டு இருப்பது தெரியவந்தது.
Actor: கணவரை பிரிந்த நடிகையுடன் லிவ் இன் – இல் இருக்க ஆசைப்படும் சிங்கிள் நடிகர்!
என்ன பதிலே இல்லை இன்று மாலை பாடல் வெளியாக உள்ள நிலையில் நடிகர் கார்த்தியும் நடிகை த்ரிஷாவும் டிவிட்டரில் விளையாடி வருவது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. வந்திய தேவனான கார்த்தி இளையபிராட்டி…. hi என த்ரிஷாவை டேக் செய்து டிவிட்டியுள்ளார். ஆனால் அதற்கு பதில் இல்லாததால், என்ன பதிலே இல்லை என்றும் சோகமான ஈமோஜியை ஷேர் செய்து கேட்டுள்ளார் கார்த்தி.
Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வந்த கோபம்.. லால் சலாம் படப்பிடிப்பில் நடந்தது என்ன?
தரிசனம் கிடைக்குமாஅதனை பார்த்த நடிகை த்ரிஷா, என்ன வாணர்குல இளவரசே என கேட்க தங்கள் தரிசனம் கிடைக்குமா என பதில் கேள்வியை கேட்டுள்ளார் வந்தியத்தேவன் கார்த்தி. அதற்கு ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன் என்று பதில் அளித்துள்ளார் குந்தவை த்ரிஷா. அதோடு அவர்களின் இந்த சாட் நிற்கவில்லை.
Rohini: ரகுவரன் இப்போது இருந்திருந்தால்… மறைந்த கணவரை நினைத்து உருகிய ரோகினி!
PS2 a3அடுத்த பதிவில் கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ? என கார்த்தி மீண்டும் கேட்க, வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு?
கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா ? என்கிறார் குந்தவை. குந்தவையின் கேள்வியால் பதறிய வந்தியத்தேவன் கார்த்தி, ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன் என்று பதில் அளித்துள்ளார்.
திட்டம்போட்டு நினைத்ததை சாதித்த ஜோதிகா!
காத்திருங்கள்அதற்கு வீரரே பாடல் எப்போதோ ready மாலை 6 மணி வரை காத்திருங்கள் என்று பதில் கூறியுள்ளார் குந்தவை த்ரிஷா. இன்று மாலை பாடல் வெளியாக உள்ள நிலையில் அதற்கு இப்படி டிவிட்டரில் விளையாடியப்படி சாட் செய்து வருகின்றனர் த்ரிஷாவும் கார்த்தியும். நடிகை த்ரிஷா தற்போது விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் த்ரிஷாவின் இந்த டிவிட்டுகளை பார்த்த நெட்டிசன்கள், ஷூட்டிங் இல்லையா மேடம் என கேட்டு வருகின்றனர்.
Suriya: மும்பையில் பிரம்மாண்ட வீட்டை தொடர்ந்து… சொகுசு பிளாட் வாங்கிய சூர்யா.. விலையை கேட்டா..
Trisha Karthi