நடிகை ரோகினி மறைந்த தனது கணவர் ரகுவரன் குறித்து உருக்கமாக பதிவிட்டிள்ளார்.
ரோகினி ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நடிகை ரோகினி. தனது 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக மட்டும் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரோகினி. பின்னர் ஹீரோயினாகவும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரோகினி. Vijay, Vijay Secret affair: விஜய்யின் ரகசிய உறவு.. சண்டை போட்டு எச்சரித்த சங்கீதா.. கொளுத்தி போட்ட பிரபலம்… விளாசும் ரசிர்கள்!
ரகுவரன்தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார் ரோகினி. நடிகையாக மட்டுமின்றி, பாடல் ஆசிரியர், வசனகர்த்தா என பல முகங்களை கொண்டுள்ளார் நடிகை ரோகினி. தற்போதும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார் ரோகினி. நடிகை ரோகினி, கடந்த 1996ம் ஆண்டு பிரபல நடிகரான ரகுவரனை திருமணம் செய்து கொண்டார். Samantha: ‘நான் செஞ்ச பெரிய தப்பே அதுதான்’.. ஓபனா பேசிய சமந்தா?
ரகுவரன் மரணம்ரோகினி, ரகுவரன் தம்பதிக்கு ரிஷி வரன் என்ற மகன் உள்ளார். கடந்த 2004ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக ரகுவரனும் ரோகினியும் பிரிந்தனர். இதையடுத்து படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் 19ம் தேதி காலமானார். இந்நிலையில் நேற்று ரகுவரனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது மனைவியும் நடிகையுமான ரோகினி தனது சமூக வலைதள பக்கத்தில் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
Meena: ‘பப்புக்குலாம் கூப்பிடுவாங்க.. தனியா இருந்ததே இல்லை’ போட்டுடைத்த மீனா!
ரகு உயிரோடு இருந்திருந்தால்..அதில், 2008ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஒரு சாதாரண நாளாகத்தான் தொடங்கியது, ஆனால் அந்த நாள் எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் மாற்றியது. ரகு உயிரோடு இருந்திருந்தால், சினிமாவின் இந்தக் கட்டத்தை மிகவும் நேசித்திருப்பார், மேலும் ஒரு நடிகராகவும் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். ரோகினியின் பதிவை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Yejaman, Rajinikanth: ‘எஜமான்’ வானவராயன் போல மாப்பிள்ளை வேணும்… வைரலாகும் ரசிகையின் கடிதம்!
200க்கும் மேற்பட்ட படங்கள்நடிகர் ரகுவரன், கேரளாவை பூர்விகமாக கொண்டவர். மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ரகுவரன், ஏழாவது மனிதன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில், ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் ரகுவரன்.
Suriya: மும்பையில் பிரம்மாண்ட வீட்டை தொடர்ந்து… சொகுசு பிளாட் வாங்கிய சூர்யா.. விலையை கேட்டா..
Raguvaran Rohini