தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மத்தியில் அதிரிபுதிரியான வரவேற்பை பெற்ற படம் கே.ஜி.எப். இந்தப்படத்தில் ராக்கி பாயாக நடித்த யாஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் இவர் யாஷ் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இந்தப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர் கடந்தாண்டு வெளியான ‘கோப்ரா’ படம் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ரிலீசான இந்தப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கன்னட திரையுலகில் பிசியாக நடித்து வரும் இவர் ‘கே.ஜி.எஃப்’ படத்தில் நடித்த போது யாஷ் அவருக்கு தொல்லை கொடுத்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும், இதனால் அவர் இனிமேல் யாஷுடன் இணைந்து நடிக்கக்கூடாது என முடிவு செய்துள்ளதாகவும் இணையத்தில் தீயாய் செய்திகள் பரவியது.
AK 62: கைவிட்டு போன ‘ஏகே 62’ பட வாய்ப்பு: விக்னேஷ் சிவன் இப்ப என்ன சொல்லிருக்காரு பாருங்க.!
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விளக்கமளித்துள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூக ஊடகங்களை சிலர் தவறான தகவல்களை பரப்புவதற்காகவே பயன்படுத்துகின்றனர். ஆனால் நான் அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த பயன்படுத்துகிறேன்.
ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 லட்சம்: புது மாப்பிள்ளையிடம் ஹன்சிகாவின் அம்மா போட்ட டீல்.!
ராக்கிங் ஸ்டார் யாஷுடன் ‘கே.ஜி.எஃப்’ படத்தில் இணைந்து பணியாற்றிஎதை பெருமையாக கருதுகிறேன். யாஷ் ஒரு சிறந்த மனிதர். நல்ல நணபர் மற்றும் என்னை ஊக்குவிப்பவர். நான் எப்போதும் ராக்கிங் ஸ்டார் யாஷின் ரசிகையாகவே இருப்பேன் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் யாஷ் குறித்து இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.