சிறுத்தை சிவா இயக்கும் ‘சூர்யா 42’ படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியுள்ள தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
சிவாவுடன் இணைந்த சூர்யா’சூர்யா 42′ படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. வீரம், வேதாளம், அண்ணாத்த போன்ற பேமிலி டிராமா படங்களை இயக்கி சிறுத்தை சிவாவுடன் முதன்முறையாக சூர்யா இணைந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் ‘சூர்யா 42’ படத்திற்கு எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சூர்யா ஜோடியான திஷா பதானி ‘சூர்யா 42’ படப்பிடிப்பு பிரம்மாண்ட போஸ்டர் வெளியீட்டுடன் ஆரம்பம் ஆனது. ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.
கோடிகளை அள்ளும் ‘சூர்யா 42’கிட்டத்தட்ட பத்து மொழிகளில் பான் இந்தியா படமாக ‘சூர்யா 42’ படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்தப்படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே மிகப்பெரிய அளவில் பிசினஸ் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தி உரிமை, சாட்டிலை, டிஜிட்டல் மற்றும் வினியோக உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்று தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘சூர்யா 42’ புரமோஇதன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. ‘சூர்யா 42’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய சமயத்தில் மோஷன் போஸ்டர் வெளியானது. அதன்பின்னர் படம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தனர் படக்குழுவினர். விரைவில் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளிக்கும் விதமாக ‘சூர்யா 42’ படத்திற்கான புதிய புரமோ வீடியோவை படக்குழுவினர் உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டிஇதனை உறுதி செய்யும் விதமாக பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ‘சூர்யா 42’ டைட்டில் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாக இருப்பதாக கூறியுள்ளார். அத்துடன் படத்தின் டீசர் மே மாதம் ரிலீசாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ‘சூர்யா 42’ டைட்டில் அறிவிப்பு விக்ரம், லியோ பாணியில் புரமோவாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.