விக்ரம் படத்தை தொடர்ந்து
கமல்
தன் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக பல படங்களை தயாரிக்கவுள்ளார். பொதுவாக கமல் தான் வித்யாசமாக முயற்சிக்கும் படங்களை தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாகவே தயாரித்தார்.
ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம் என பல படங்களை கமலே தயாரித்து வெளியிட்டார். கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தையும் கமல் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாகவே தயாரித்திருந்தார். அப்படம் கமலுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கவே தற்போது மற்ற ஹீரோக்களையும் வைத்து படங்களை தயாரித்து வருகின்றார்.
Leo: லியோ படத்தின் மெயின் வில்லன் இவரா ?லோகேஷ் வைத்த ட்விஸ்ட்..இதை யாரும் எதிர்பார்களையே..!
சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற ஹீரோக்களின் படங்களை தயாரிக்கும் கமல் தளபதி விஜய்யின் படத்தை தயாரிக்கவும் விரும்பினார். அதற்கான முயற்சிகளையும் கமல் மேற்கொண்டார். இணையத்திலும் கமல் மற்றும் விஜய் கூட்டணி அமையவுள்ளதாக பல தகவல்கள் வந்தன.
ஆனால் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை, அதன் காரணமாகவே இக்கூட்டணி நிகழாமல் போனது. இந்நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பேசுகையில், மெர்சல் படம் வெளியானபோது கமல் அட்லீ மற்றும் விஜய்யை தன் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார்.
அப்போது அபூர்வ சகோதரர்கள் படத்தின் போஸ்டருக்கு முன் இன்று விஜய் மற்றும் அட்லீயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் கமல். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மெர்சல் திரைப்படத்தின் கதை அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதையை போலவே இருப்பதாக பல விமர்சனங்கள் எழுந்தன.
எனவே தான் கமல் நாசுக்காக விஜய் மற்றும் அட்லீயை கலாய்த்ததாக அப்போது பேசப்பட்டது.எனவே இதன் காரணமாக விஜய் கமலின் மீது அப்சடானதாகவும், அதுவும் கமலின் தயாரிப்பில் விஜய் நடிக்காமல் போனதற்கு காரணமாக இருக்கும் என்றும் தெரிவித்தார் பிஸ்மி. ஆனால் இதைத்தவிர விஜய்யின் சம்பளமும் ஒரு காரணமாக இருக்க அதிக வாப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.