வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: அந்நிய சக்திகளின் உதவியுடன், பஞ்சாப்பில் அமைதியை குலைக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
சண்டிகர்-பஞ்சாபில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராட்டங்கள் நடத்தி வரும் காலிஸ்தான் ஆதரவாளரும், மத பயங்கரவாத பிரசாரகருமான அம்ரித்பால் சிங்கை, 30, கைது செய்ய போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக மொகா, சங்ரூர், மொஹாலி உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை மறுநாள் மதியம் வரை மொபைல் போன் வழியான இணையதள, எஸ்.எம்.எஸ் சேவைகள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்ட அறிக்கை: அந்நிய சக்திகளின் உதவியுடன் பஞ்சாப்பின் சுற்றுச்சூழலை சீர்கெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் கடந்த சில நாட்களாக சில சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்படும்.
அமைதியை குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நமது குழந்தைகளுக்கு தேவை புத்தகங்கள்; ஆயுதங்கள் அல்ல. இவ்வாறு கடுமையாக பஞ்சாப் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், சட்டம் ஒழுங்கை சரியாக கடைப்பிடித்ததற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை வாழ்த்துகிறேன். சட்டம் ஒழுங்கை பஞ்சாப் அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது எனக் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement