இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசியக் கொடியை இறக்கி விட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏராளமான இந்தியர்கள் தேசியக்கொடியுடன் தூரதகம் முன்பு திரண்டனர்.
பிரிவினை பேசி வரும் பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீரென லண்டனிலுள்ள தூதரகம் முன்பு குவிந்து கற்களை வீசித் தாக்கியதோடு, இந்திய தேசியக் கொடியையும் கீழே இறக்கினர்.
இந்நிலையில், இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தும், காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் ஏராளமான இந்தியர்கள் கையில் மூவர்ணக் கொடியுடன் திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.