ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த சிவக்குமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வருகிறார் சிவக்குமார். இவர் நடந்துமுடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் நடத்தும் அலுவலராகவும் செயல்பட்டார். இவர் பல்லாவரத்தில் ஆணையாளராக பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததின் அடிப்படையில் பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட வந்தபோது அவரது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் சிறிதுநேரம் காத்திருந்து, பின்னர் அவரது குடும்பத்தினர் அனைவரும் வந்தபிறகு ஆணையாளரின் கார் மற்றும் வீட்டில் சோதனையானது நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்தபிறகே புகார் குறித்த விவரங்கள் தெரியவரும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM