ஈரோடு: ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக சிவகுமார் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் சிவகுமார் பணிபுரிந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவர் பல்லாவரம் நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து போது பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் இல்லத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் இன்று மாலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.