ஊழல் எதிர்க்கட்சியினர் பார்லி., அவை நடக்க விடாமல் தடுக்கின்றனர்: அனுராக் தாக்கூர் காட்டம்| Corrupt opposition parlies, prevent them from happening: Anurag Thakur Kattam

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஊழல் செய்யும் எதிர்க்கட்சியினரான அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் உள்ளிட்டோர் ஒன்று கூடி, பார்லிமென்டை நடக்க விடாமல் தடுக்கின்றனர் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.

latest tamil news

இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால், பார்லிமென்ட் முடங்கி வருகின்றது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டில்லி மாநில பட்ஜெட்டை அனுமதி தரக் கோரி மார்ச் 17ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு டில்லி அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட இருந்த, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வில்லை. மத்திய உள்துறை அமைச்சகம் பதிலுக்காக டில்லி அரசு காத்திருக்கிறது. இதற்கு விரைவில் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்கும்.

latest tamil news

ஊழல் செய்யும் எதிர்க்கட்சியினரான அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் உள்ளிட்டோர் ஒன்று கூடி, பார்லிமென்ட் அவை நடக்க விடாமல் தடுக்கின்றனர். நான் அரவிந்த் கெஜ்ரிவால் விடம், ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் படித்தவர் தானே… ஏன் உங்கள் சுகாதார அமைச்சரும், துணை அமைச்சரும் சிறைக்குள் இருக்கிறார்கள். உலகில் எங்கு நிலநடுக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால், மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி செய்து வருகிறது.

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது இந்தியாதான் முதலில் நிவாரண உதவி வழங்கியது. துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது இந்தியா தான் முதலில் உதவிகள் செய்தது. இப்போது செயல்படும் அரசு உதவி வழங்குபவர்களாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.