புதுடெல்லி: டெல்லி அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு ஒன்றிய அரசு அனுமதியளிக்காதது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் தாக்கலுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசு சேவையாற்ற விரும்புகின்றது. சண்டையிடுவதற்கு விரும்பவில்லை. சண்டை யாருக்கும் பயன்படாது. நாங்கள் பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். பிரதமர் டெல்லியை வெல்ல வேண்டும் என்று நினைத்தால் டெல்லி மக்களின் இதயங்களை முதலில் வெல்ல வேண்டும். இது தான் அவருக்கான எனது மந்திரம். நீங்கள் மூத்த சகோதரர். நான் இளைய சகோதரன். நீங்கள் எனக்கு ஆதரவு கொடுத்தால் நானும் அதேபோன்று நடந்து கொள்வேன். இளைய சகோதரரின் இதயத்தை வெல்ல விரும்பினால் அவரை நேசியுங்கள்” என்றார்.