ஒருநாள் போட்டியை பார்க்கவே ரொம்ப சலிப்பா இருக்கிறது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
Ind Vs Aus 3 ஒருநாள் போட்டி –
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.
சலிப்பா இருக்கு
இந்நிலையில், ஒருநாள் போட்டியை பார்க்கவே ரொம்ப சலிப்பா இருக்கிறது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
தற்போது விளையாடப்பட்டு வரும் ஒருநாள் கிரிக்கெட் வடிவமானது ரொம்ப சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போதைய காலக்கட்டத்தில் பந்துவீச்சாளர்களுக்கு அதிக சுமையை இப்போட்டிகள் கொடுக்கின்றன.
15-வது ஓவர் முதல் 40 ஓவர் வரையில் ஆட்டங்கள் சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 25, 25 ஓவர்களாக 4 கால் பகுதிகளாக டெஸ்ட் போட்டிகளை போல நடத்தினால் சுவாரஸ்யங்களை கூட்ட முடியும்.
ஒவ்வொரு முறை நடைபெறும் 25 ஓவர்களுக்குப் பிறகு, பேட்டிங் வீரர்களை பந்துவீச்சுக்கு இடையில் மாறி மாறி விளையாடலாம். அதனால், டாஸ், பணி மற்றும் பிற நிலைமைகளில் எதிரணிக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும் என்று கருத்தை தெரிவித்துள்ளார்.