சாலையில் நடந்த கோர சம்பவம்… புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார்


பர்மிங்காம் பகுதியில் சாலையை கடக்கும் போது வாகன விபத்தில் சிக்கி தந்தை ஒருவர் பலியான வழக்கில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஷாசாத் ஹுசைன் மாயம்

கடந்த ஆண்டு நவம்பர் 1ம் திகதி பர்மிங்காம், போர்ட்ஸ்லி கிரீன் பகுதியில் சாலை விபத்தில் சிக்கி 45 வயதான பிலிப் டேல் என்பவர் பரிதாபமாக கொல்லப்பட்டார்.

சாலையில் நடந்த கோர சம்பவம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார் | Cops Name Man Hunting After Dad Killed

@PA

இந்த நிலையில், வழக்கை விசாரித்துவரும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார், வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு மாயமானதாக நம்பப்படும் 43 வயதான ஷாசாத் ஹுசைன் என்பவர் தொடர்பில் புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேலும், ஷாசாத் ஹுசைன் என்ற அந்த நபர் பிரித்தானியாவில் இருந்து வெளியேறி இருக்கலாம் என நம்பும் பொலிசார், தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் அவரை இணைத்துள்ளனர்.

மட்டுமின்றி, இந்த விவகராம் தொடர்பில் 42 மற்றும் 36 வயதுடைய இருவரை ஏற்கனவே பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆனால் அவர்கள் இருவரும் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தேடும் நடவடிக்கை தொடரும்

இந்த வழக்கு தொடர்பில் ஷாசாத் ஹுசைன் என்பவரிடம் தொடர்புகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள பொலிசார்,
அபித் கான் எனவும் அறியப்படும் அந்த நபர், பிரித்தானியாவை விட்டு வெளியேறி இருந்தாலும், அவரை தேடும் நடவடிக்கைகளை தொடர்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

சாலையில் நடந்த கோர சம்பவம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார் | Cops Name Man Hunting After Dad Killed

@PA

ஷாசாத் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், அல்லது உறவினர்கள் உடனடியாக விசாரணை அதிகாரிகளை தொடர்புகொள்ள வேண்டும் என பொலிஸ் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.