சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளது. ரஜினியின் மகள் அளித்த புகாரில் அவரது வீட்டில் பணிபுரிந்த ஈஸ்வரி என்பவரை பிடித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தியது. ஈஸ்வரியிடம் நடத்திய விசாரணை, வங்கி விவரங்களை ஆய்வு செய்ததில் நகைகளை திருடியது தெரியவந்தது.