புதுடெல்லி,
இந்தியா வருகை தந்திருந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு பானிப்பூரியை ருசித்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் நேரம் செலவிட்டார். அப்போது ஜப்பான் பிரதமருக்கு இந்தியாவின் உணவு வகைகளான ப்ரைட் இட்லிஸ், மாம்பழ ஜூஸ் மற்றும் பானிப்பூரி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதில் ஜப்பான் பிரதமர் பானிப்பூரியை மிகவும் விரும்பி சாப்பிடும் வீடியோ தான் தற்போது நெட்டிசன்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Related Tags :