சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல், உலகம் முழுவதையும் கவர்ந்து வருகிறது.
உலக நாடுகள் பலவற்றின் மக்களும் அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
ஜேர்மனி மட்டும் விதிவிலக்கா என்ன?
Express Photo
இந்நிலையில், இந்தியாவின் டில்லியிலுள்ள சாந்தினி சவுக் என்னும் இடத்தில், இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் Dr Philipp Ackermann உட்பட, ஜேர்மானியர்களும் இந்தியர்களுமாக தூதரக ஊழியர்கள் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடினர்.
ஃப்ளாஷ் மாப் என்னும் முறையில், மக்களுக்குத் தெரியாமல் ஆங்காங்கு உட்கார்ந்திருந்த 20 பேர் எழுந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாட, மக்கள் ஆச்சரியத்திலும் உற்சாக வெள்ளத்திலும் திளைத்தார்கள்.
இந்த விடயத்தை ட்விட்டரில் ஜேர்மன் தூதரே தெரிவித்துள்ளதுடன், அந்த நடன வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
Germans can’t dance? Me & my Indo-German team celebrated #NaatuNaatu’s victory at #Oscar95 in Old Delhi. Ok, far from perfect. But fun!
Thanks @rokEmbIndia for inspiring us. Congratulations & welcome back @alwaysRamCharan & @RRRMovie team! #embassychallange is open. Who’s next? pic.twitter.com/uthQq9Ez3V
— Dr Philipp Ackermann (@AmbAckermann) March 18, 2023
ஜேர்மனி மட்டுமா?
சென்ற மாதம், கொரிய தூதரக ஊழியர்கள் 50 பேர், இதேபோல நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோவும் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.