திருவனந்தபுரம்: எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எட்டிப்பார்க்க ஊடகங்கள் அல்லது அரசு நிறுவனங் களுக்கு உரிமை இல்லை என கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. ஆன்லைன் மீடியா சேனல்களை கடுமையாக சாடியுள்ளது. ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எட்டிப்பார்க்க எந்த தனிநபருக்கோ, ஊடகங்களுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ உரிமை இல்லை என்று கூறிய நீதிமன்றம், ஆன்லைன் சேனல்கள் காழ்ப்புணர்ச்சியில் செயல்பட்டு வருகின்றன என்றும், ஒருவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவரை இழிவுபடுத்தும் நோக்கில் ஆன்லைன் சேனல்கள் […]