திருத்தணி: திருத்தணி அருகே கொடிவலசை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரில் இருந்து ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர். கொடிவலசை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து போலீசார் வந்து சோதனையிட்டதில் காரில் செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது.