திருத்தணி: திருத்தணி ஆர்.கே.பேட்டை அருகே மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்தனர். மூதாட்டி கொலை வழக்கில் சதீஷ் (21), வினோத் (28) ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆர்.கே.பேட்டை அருகே எரும்பி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார். நகைகளை கொள்ளையடிக்க வீட்டுக்குள் புகுந்த கும்பல், தடுக்க முயன்ற மூதாட்டியை அடித்துக் கொலை செய்தது.