புதுச்சேரியில், தொழிலதிபர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, 80 சவரன் தங்க நகைகள் மற்றும் 38 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பலை, சிசிடிவி காட்சி அடிப்படையில் அடையாளம் கண்ட போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
ரெயின்போ நகரில், நேற்று இரவு வீட்டு வாசலில் நின்ற கருணாநிதியிடம் விலாசம் கேட்பது போல் நடித்து, கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்டது லாஸ்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார் தலைமையிலான கும்பல் என கண்டறிந்தனர்.