சென்னை: நாட்டிலேயே முன்னோடி திட்டமான ஓய்வுபெற்ற காவலர் நல வாரியம் அமைக்க தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. நல வாரியத்துக்கான விதிமுறைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை இறுதி செய்ய டிஜிபி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் ஓய்வுபெற்ற துணை ஆணையர் ஆர்.சின்னராஜ், எஸ்.பி. (ஓய்வு) என்.தாமோதரன், ஏ.எஸ்.பி (ஓய்வு) முரளி, அரசு பிரதிநிதி வைதேகி, நிதி நிர்வாகி சுமதி ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்