கடலூர்: நில எடுப்பால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கபப்டும் என என்எல்சி உறுதி அளித்துள்ளது. நில உரிமையாளர்களுக்கும், கடலூர் மாவட்ட மக்களுக்கும் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். சுரங்கத் திட்டமிடல் துறை வழிகாட்டுதலின்படி, தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. நிலக்கரி வெட்டுவதற்குத் தேவையான கையகப்படுத்திய நிலங்கள் கையிருப்பில் இல்லை. நிலங்கள் கையிருப்பில் இல்லை என்பதால் பழுப்பு நிலக்கரி உற்பத்தி, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகப்படியான இழப்பீடு கொடுக்கும் முதல் பொதுத்துறை நிறுவனம் என்எல்சி என்றும் விளக்கம் அளித்துள்ளது.