தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுபோல், நெல் குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் தராமல், ரகத்திற்கு ஏற்றவாறு நூறு ரூபாய் வரையில் மட்டும் ஊக்கத்தொகை அறிவித்து திமுக அரசு விவசாயிகளை ஏமாற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், வேளாண் மானிய கோரிக்கையில் இடம்பெற்றவை தான் பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு எவ்வித பெருந்திட்டங்களும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு அதிமுக ஆட்சியில் 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது, 13 ஆயிரம் 500 ரூபாய் மட்டுமே தரப்படுவதாகவும் இ.பி.எஸ். கூறினார்.