கடந்த ஆண்டு பெரோஸ்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, போராட்டக்காரர்களால் சுமார் 20 நிமிடங்கள் மேம்பாலத்தின் மீது காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில், பல்வேறு காவல்துறை அதிகாரிகள் மீது பணி நீக்கம், பணி இறக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த குழு பஞ்சாப் அரசுக்கு பரிந்துரை அளித்தது. அந்த வகையில், முன்னாள் டிஜிபி சத்தோ பாத்யாயாவின் ஓய்வூதியம் பாதியாக குறைக்கப்பட உள்ளதோடு, பணியில் உள்ள மற்ற இரண்டு அதிகாரிகள் பணி இறக்கம் மற்றும் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். மேலும் சில காவல்துறை அதிகாரிகளுக்கும் விளக்கம் கேட்டு பஞ்சாப் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
“பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு”…உயர் காவல் அதிகாரிகளுக்கு பறந்த நோட்டீஸ் – பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு#pmmodi | #Punjab | #ThanthiTV https://t.co/50DSb0mz87
— Thanthi TV (@ThanthiTV) March 21, 2023