பிஜபூர்: சட்டீஸ்கரின் பிஜபூர் மாவட்டத்தில் உள்ள கோர்சோலி மற்றும் தோட்கா இடையே உள்ள காட்டுப்பகுதியில் போலீசார், மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் சிறப்பு படையினர் தீவிர நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த நக்சல்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். இதற்கு போலீசார் தந்த பதிலடியில் பெண் நக்சல் ஒருவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சீருடையில் இருந்த பெண் நக்சலின் சடலத்தை போலீசார் மீட்டனர். அங்கிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மற்றவர்கள் அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகினர்.