இந்திய மாநிலம் கர்நாடகாவில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இளம் கர்ப்பிணி
கர்நாடகாவின் கொப்பில் மாவட்டம் கப்பூருவைச் சேர்ந்தவர் நேத்ராவதி குதி(26). இரண்டு மாத கர்ப்பிணியான இவர் நேற்று முன்தினம் இரவு மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது நேத்ராவதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
அவரது வீட்டிற்கு அருகிலே இறந்த நிலையில் கிடந்தது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
பொலிஸார் விசாரணை
அதனைத் தொடர்ந்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பொலிஸார் நேத்ராவதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் நடத்திய விசாரணையில் பணத் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
ஆனால் கொலை செய்தது யார் என தெரியவில்லை. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.