மாஸ்கோ, : ரஷ்யா – உக்ரைன் போர் ஓராண்டை கடந்து தொடர்கிறது. போரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. சமீபத்தில் சர்வதேச நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக போர் குற்றத்தில் கைது வாரன்ட் பிறப்பித்தது.
இந்நிலையில் சீன அதிபர் ஷீ ஜின்பிங் மூன்றுநாள் பயணமாக நேற்று ரஷ்யா சென்றார். மாஸ்கோ விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்தார். இன்று இரு தலைவர்களும் இருதரப்பு உறவு, போர் நிலவரம் உட்பட பல்வேறு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இச்சந்திப்பு இரு நாடுகளும் ‘பலம் வாய்ந்த கூட்டாளிகள்’ என்பதை மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துக்காட்டுவது போல அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement