புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி லண்டனில் இந்தியாவின் ஜனநாயகம் குறித்து பேசியது தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில், மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என பாஜகவின் கோரிக்கையை காங்கிரஸ் முற்றிலும் நிராகரித்து வருகிறது. இரண்டு கட்சியில் இருக்கும் தலைவர்கள் ஒருவரையொருவர் மாறிமாறி வாரத்தையால் தாக்கி வரும்வேளையில், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ராகுல் காந்தியை “தற்கால இந்திய அரசியலின் மிர் ஜாஃப்ர்” எனக்கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைவரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியை மிர் ஜாஃபருடன் ஒப்பிட்ட பாஜக
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது, “ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் நாட்டை அவமானப்படுத்தியுள்ளார். அவர் தற்கால இந்திய அரசியலின் மிர் ஜாஃபர். இந்தியாவின் இளவரசனாக (நவாப்) ஆக வெளிநாட்டு சக்திகளின் உதவியை நாடவே அவர் வெளிநாடு சென்றதாகவும், நமது நாட்டை அவமானப்படுத்தி, அந்நிய சக்திகள் தலையிட வேண்டும் என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
ராகுல் காந்தியை மிர் ஜாஃபருடன் ஒப்பிட்டு பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா பேசியது, பாஜக எந்த வகையான வாரத்தைகளை பயன்படுத்துகிறது என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா சர்ச்சையில் சிக்கியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் சட்டப்படி நடவடிக்கை
ராகுல் காந்தியை மிர் ஜாஃப்ர் என்று அழைத்த பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா மீது காங்கிரஸ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் பவன் கேரா, “மிர் ஜாஃப்ர் குறித்த சம்பித் பத்ராவின் பேச்சுக்கு விரைவில் பதில் கிடைக்கும். எப்படி பதிலளிப்பது என்பதை அவர்களிடமிருந்து (பாஜக) நாங்கள் கற்றுக்கொள்கிறோம். அவரது அறிக்கை மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரங்களின்படி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சம்பித் பத்ராவுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மிர் ஜாஃப்ருடன் ஒப்பிடு
இருப்பினும், இந்திய அரசியலில் மிர் ஜாஃப்ர் குறித்து பேசுவது இது முதல் முறையல்ல. மிர் ஜாஃப்ர் என்ற பெயரை பெரும்பாலும் அரசியல் கட்சிகளால் எதிரிகளைத் தாக்கப் பயன்படுத்துகிறார். முன்னதாக, பாரத் ஜோடோ யாத்திரையின் போது காங்கிரசை விட்டு வெளியேறிய குலான் நபி ஆசாத் மற்றும் தற்போதைய அசாமின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ‘மிர் ஜாஃப்ர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதுமட்டுமின்றி, 2020-ம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசை விட்டு வெளியேறியபோது, அவரையும் மிர் ஜாஃப்ருடன் ஒப்பிட்டு சில காங்கிரஸ் தலைவர்கள் பேசினார்கள். மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலின் போது, டிஎம்சி (TMC) தலைவர் மம்தா பானர்ஜி, கட்சியை விட்டு வெளியேறிய சுவேந்து அதிகாரி, தினேஷ் திரிவேதி மற்றும் முகுல் ராய் ஆகியோரை மிர் ஜாஃப்ர் என்று அழைத்தார்.
யார் இந்த மிர் ஜாஃப்ர்?
துரோகம் செய்பவர்களை மிர் ஜாஃப்ருடன் ஒப்பிடுவது வாடிக்கையாகிவிட்டது. மிர் ஜாபர் 1857 முதல் 1860 வரை வங்காளத்தின் நவாப்பாக இருந்தார். அதற்கு முன்னதாக அப்போதைய வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் தளபதியாக இருந்தார். நவாபைக் காட்டிக்கொடுத்துவிட்டு ஆங்கிலேயர்களுடன் மிர் ஜாஃப்ர் கைகோர்த்தார். இதன் காரணமாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக நவாப் சிராஜ்-உத்-தௌலா தோல்வியை சந்திக்க நேரிட்டது. துரோகத்திற்குப் பதிலாகத்தான் மிர் ஜாஃப்ருக்கு நவாபின் அரியணை கிடைத்தது. மிர் ஜாஃபரின் துரோகத்தினால் சிராஜ்-உத்-தௌலா தனது உயிருடன் செலுத்த வேண்டியிருந்தது.