ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-ஐ சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு  

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் ரூ.1,695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், 1.5 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும். சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும். ரூ.82 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.  தரிசு நிலங்களை கண்டறிந்து மா, பலா, கொய்யா நட நடவடிக்கை எடுக்கப்படும். 

விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு

சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற உயர் ரக மரக்கன்றுகள் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடப்பட்டுள்ளன. 2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும். கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு. கேழ்வரகு, கம்பு போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் சிறுதானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

வேளாண் பட்டதாரிகளுக்கு கடன்

சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும். வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு. வரலாறு காணாத அளவில் நேரடி நெல் கொள்முதல் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவைகளுக்கு அரசாணை வெளியாகியுள்ளது என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெளியிட்டார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.